ஒற்றை புள்ளியால் சிறையில் சிக்கிய பயனர்- எவ்வளவு காலம் தெரியுமா?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி போட்ட பதிவிற்கு ஒற்றை புள்ளியால் சர்ச்சையை கிளப்ப முயன்ற ஆர்வலருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாம்பு முட்டைகளில் இருந்து குட்டிகளை எடுப்பதை பார்த்திருக்கின்றீர்களா? மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ஈரானிய சமூக ஊடக பதிவாளர் ஹொசைன் ஷான்ப் ஒரு புள்ளியை மட்டும் பயன்படுத்தி டுவிட் செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் உச்ச தலைவர் அலி கமேனியின் பதிவை விட அதிக லைக்குகள் குவிந்துள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்பை துண்டியதாக கூறி உடனடியாக கைது செய்யப்பட்டார்.
12 ஆண்டுகள் சிறை தண்டனையா?
இதையடுத்து இது தொடர்பான விசாரணைகளின் முடிவில் ஆர்வலருக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்காக 5 ஆண்டுகள், இஸ்லாமிய ஆலயங்களை அவமதித்ததற்காக 4 ஆண்டுகள், தவறான தகவல்களை பரப்பியதற்கு 2 ஆண்டுகள் மேலும் அரசு எதிரான பிரச்சாரத்திற்காக 1 ஆண்டுகள் என மொத்தமாக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹொசைன் ஷான்ப் வழக்கறிஞர்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என யோசனை வெளியிட்டுள்ளார்.
அதே சமயம் ஹொசைன் ஷான்ப் சமூக ஊடக கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
The Islamic Republic's security forces on Tuesday arrested Iranian blogger, writer and proofreader Hossein Shanbehzadeh who, last month, posted a single dot in reply to Supreme Leader Ali Khamenei's tweet, and that comment was liked far more than Khamenei's original tweet.… pic.twitter.com/P4Bram1nr6
— Iran International English (@IranIntl_En) June 5, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |