ஐபிஎல் 2022: எனது மிகப்பெரிய கனவு !U19 உலகக் கோப்பை வென்ற கேப்டன் உருக்கம்;
15-வது ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலத்தில் பல இளம்வீரர்களை பெரிய அளவில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
ஆனால் U19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. U19 பெரிதும் பேசப்பட்ட வீரர்களான இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
அடுத்து, மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடிய ராஜ்வர்தன் ஹேங்கர்கேகரை ரூ.1½ கோடிக்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்தது.
ஆனால், பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜூனியர் அணியின் கேப்டன் யாஷ் துல் ரூ.50 லட்சத்திற்கே விலை போனார். அவர் தனது ஐ.பி.எல். பயணத்தை சொந்த ஊர் அணியான டெல்லி கேப்பிட்டல்சுடன் தொடங்க உள்ளார்.
மற்றொரு ஜூனியர் வீரரான சுழற்பந்து வீச்சாளர் அனீஷ்வர் கவுதமை ரூ.20 லட்சத்துக்கு பெங்களூரு எடுத்தது. இதுகுறித்து பேசிய யாஷ் துல், “ இது ஒரு கனவாகும்.,
என் மீது நம்பிக்கை வைத்த என்னை ஏலத்தில் எடுத்த டெல்லி அணிக்கு மிகப்பெரிய நன்றி. நான் 8, 9 வருடங்களாக டெல்லி கேபிடல்ஸ் அகாடமியில் ஒரு பங்காக இருந்துள்ளேன்”.
எனவே இது எனக்கு மிகப்பெரிய கனவாகும்.
அணியில், இடம்பிடிக்க எனது சிறந்த ஆட்டத்தை வழங்க தயாராக உள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.