என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள்.. சென்னை வீரர் உத்தப்பா ஓபன் டாக்!
ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தற்போது விளையாடி வருபவர் தான், இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும், இவர் சமீபத்தில், தமிழக வீரர் அஸ்வினுடன் தனது அனுபவங்களை பகிர்ந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்போது பேசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து தான் மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாகவும், வேறு அணிக்கு தன்னை மாற்ற ஆவணங்களில் கையெழுத்திடுமாறு மும்பை இந்தியன்ஸ் மிரட்டியதாகவும் ராபின் உத்தப்பா குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
வெளியேற சொன்னார்கள்
இதுகுறித்து விரிவாக பேசுகையில், “நான், ஜாகீர் கான் மற்றும் மணீஷ் பாண்டேவுடன் இருந்தேன். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் அணி மாற்றப்பட்ட வீரர் நான் தான். எனக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது.
2 பந்தில் 2 சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய திவாட்டியா - கரகோஷம் எழுப்பிய ரசிகர்கள்

ஏனென்றால் என் நம்பிக்கை, விசுவாசம் அனைத்தும் மும்பை அணியுடன் தான் இருந்தது. ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பு இது நடந்தது. நான் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்தேன்.
என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் சிலபல பிரச்சனைகளை அப்போது சந்தித்தேன். பெங்களூர் அணியுடனான முதல் சீசனில் நான் உண்மையில் மனச்சோர்வின் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தேன். என்னை நீக்கி விட்டு மீண்டும் அணியில் எடுத்த ஒரு மேட்சில் தான் நான் நன்றாக ஆடினேன்.
அந்தப் போட்டியில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தேவையை உணர்ந்தேன். மும்பை இந்தியன்சில் ஒருவர், அவர் பெயரை நான் கூற விரும்பவில்லை, நான் ட்ரான்ஸ்பர் பேப்பரில் கையெழுத்திடவில்லை எனில் ஒரு போட்டியில் கூட நான் லெவனில் இருக்க மாட்டேன் எனக்கூறினார் என ராபின் உத்தப்பா அதிர்ச்சியளித்தார்.

வாய்ப்பு கொடுத்த தோனி
மேலும், சென்னை அணியில் விளையாடி அனுபவத்தை கூறுகையில், நான் 2021 ம் ஆண்டு அணிக்கு வந்தேன். அப்போதே தோனி என்னை தொடர்பு கொண்டு, பிளேயிங் லெவனில் உங்களுக்கு இடம் கிடைக்காது.
உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார். மேலும், அணியில் இடம் இல்லை என்பது குறித்து நான் வருத்தப்பட கூடாது என்பதற்காக சிஎஸ்கே எடுத்த நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சிஎஸ்கேவில் இருக்கும் போது நான் ஒரு பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். சிஎஸ்கே அணி தொடங்கப்பட்டதில் இருந்தே பிசியோ, நிர்வாகிகள் என யாருமே மாறவில்லை.
சிஎஸ்கேவை பொறுத்தவரை ஒரு வீரருக்கு குறைந்து ஐந்து, ஆறு போட்டியிலாவது வாய்ப்பு தருவார்கள். நீங்கள் சிறந்த வீரர் என்று நினைத்தால் இன்னும் வாய்ப்பு கிடைக்கும்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி என்னை தேர்வு செய்த போது 80 சதவீதம் பேர் வரவேற்றாலும், 20 சதவீதம் பேர் என்னை திட்டினர். ஆனால், அவர்கள் அனைவரும் ரெய்னாவை எடுக்காமல் என்னை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

ஆனால் அவர்கள் மீது எனக்கு கோபம் வரவில்லை. ரெய்னா சிஎஸ்கே அணியின் உண்மையான சேவகன். அவர் மீது இருந்த விஸ்வாசம், பாசம் காரணமாக சில ரசிகர்கள் என்னை திட்டினார்கள் எனவும் கூறியிருந்தார்.
ராபின் உத்தப்பா ஐபிஎல் 2008 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அடுத்த ஆண்டே ஆர்சிபிக்கு ஆடினார். அப்போதுதான் ஆர்சிபி பைனலுக்கு தகுதி பெற்றது.
அப்போது அனில் கும்ப்ளே கேப்டன். இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் தோற்றது, இந்த டெக்கான் சார்ஜர்ஸ்தான் இப்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.