2 பந்தில் 2 சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய திவாட்டியா - கரகோஷம் எழுப்பிய ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் 16வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹாா்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷிகர் தவான் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 23, ஷாரூக்கான்15, ராகுல் சகார் 22 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, குஜராத் அணியில் ரஷித்கான் 3, தர்ஷன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மேத்தீவ் வாடே 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கில், தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த சுதர்ஷன் 15வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ரேட்டை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் 19 வது ஓவரில் 19 ரன்கள் தேவைபட்ட போது, ஹர்திக் பாண்டியா மில்லரின் தவறால் ரன் அவுட் ஆனார்.
Destructive finish from Rahul #Tewatia! Great captaincy by Hardik Pandya. Shubman Gill played brilliant as well. Overall, great performance by Gujarat Titans. Take a bow! ?#GTvsPBKS
— UrMiL07™ (@urmilpatel30) April 8, 2022
pic.twitter.com/DnyoDFEZRJ
சிக்ஸர் அடித்து மிரள வைத்த திவாட்டியா
பின்னர் இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும், மூன்றாவது பந்தில் மில்லர் ஒரு பவுண்டரியும் அடித்தார். நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், இறுதி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட பரபரப்பான நிலையில், ராகுல் திவாடியா 5வது பந்தில் சிக்ஸரை அடித்து மைதானத்தை ஆர்பரிக்க வைத்த நிலையில், இறுதி பந்தி மறுபடியும் ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
எப்படிப்பட்ட வாஸ்து தோஷத்தையும் நீக்கும் ஒரே செடி! எங்கு வைக்க வேண்டும்?
இதைக்கண்ட எதிரணி வாயடைத்துபோக, கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிர்ச்சியில் உறைந்து போனார். மைதனாமே கரகோஷம் எழுப்பி திவாட்டியாவை வாழ்த்தியது...
இதன்மூலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
It was 12 runs off 2 balls...and Tewatia finishes it off with 2 sixes!! This man is proper Lord Material! The Lord Tewatia ?Plus Punjab k saath iska alaag hi Dushmani hai...jab bhi milta hai pel deta hai ???#IPL2022 #Tewatia #GTvsPBKS pic.twitter.com/MolBqOSVeq
— Shantanu (@Shantanu630) April 8, 2022