ராஜஸ்தான் vs குஜராத்.. இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா போட்ட மாஸ்டர் ப்ளான் இதுவா?
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிக்கொடுக்க, சஞ்சு சாம்சன் மற்றும் பட்லரின் நிதானமாக விளையாடி வருகின்றனர்.
போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானத்தில் நன்றாக மழைபெய்துள்ளதால், முதல் பேட்டிங் ரன் அடிக்க கடினமாக இருக்கும் என ஹர்திக் பாண்ட்டியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

பாண்டியாவின் ப்ளான்
ராஜஸ்தான் அணி முதலில் அடித்து ஆடினாலும், 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என பாண்டியாவின் திட்டமாக உள்ளது.
அதேப்போல், பாண்டியா ப்ளேயிங் 11-ல் பெர்க்யூசனுக்கு பதிலாக அல்சாரி ஜோசஃப்பை கொண்டு வந்துள்ளார். ஆனால், இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது மிக சவலான ஒன்று தான்.
ஏனென்றால், இரு அணிகளும் பவுலிங்கில் பயங்கர உத்வேகத்துடன் உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியை விட குஜராத்தின் கை ஓங்கி இருக்கும் என கூறப்படுகிறது.
? Toss Update ?@hardikpandya7 has won the toss & @gujarat_titans have elected to bowl against @rajasthanroyals.
— IndianPremierLeague (@IPL) May 24, 2022
Follow the match ▶️ https://t.co/O3T1ww9yVk#TATAIPL | #GTvRR pic.twitter.com/vU3rmlVXRP