பைனல் போட்டிக்கு செல்லும் அணி எது? ராஜஸ்தா பெங்களூர் மோதல்! ப்ளேயிங் 11-ல் மாற்றமா?
ஐபில் போட்டியின் குவாலிபையர் 2வில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
முக்கியமான இந்த போட்டியில் வெல்லும் அணி 29-ம் தேதி குஜராத்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் பங்கேற்கும். மேலும், இன்றைக்கான போட்டியில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும்.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பவுன்சர் அதிகம் வரக்கூடும் என கூறப்படுகிறது. இந்த பீட்ச்சில் முதலில் பேட் செய்யும் அணி 6 முறை, 2வது பேட் செய்யும் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இது பழைய மைதானமாக இருக்கும் போது ராஜஸ்தான் அணி, இங்கு 12 போட்டியில் விளையாடி 7 முறை வென்றுள்ளது.
இந்த 3 ராசியினர்களுக்கு சனிபகவான் படாய் படுத்தப்போகிறராம்... தப்பிக்க என்ன செய்யவேண்டும்?
ராஜஸ்தான் அணியின் பலம்
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், பட்லர், சஞ்சு சாம்சன், ஹேட்மயர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில், சாஹல், போல்ட் நல்ல ஃபார்மில் இருந்தாலும், பிரசித் கிருஷ்ணாவின் வேகம் எதிரணிக்கு இந்த போட்டியில் அச்சுறுத்தலை கொடுக்கும் என கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியின் பலம்
பெங்களூர் அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே அதிகம் கைகொடுத்துள்ளனர். தொடர்ந்து டூப்ளசிஸ், கோலி அவ்வப்போது சொதப்பினாலும், போன போட்டியில் ரஜத் பட்டிதாரின் சதம் அந்த அணியை காப்பாற்ற உதவியது.
பவுலிங்கில், ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், அந்த அணிக்கு நம்பிக்கையாக உள்ளனர். எது எப்படியாக இருந்தாலும் கட்டாயம் இந்த போட்டியில் கோலி, டூப்ளசிஸ், மேக்ஸ்வெல் ரன்களை குவித்தால் மட்டுமே கோப்பை வெல்ல முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
ப்ளேயிங் 11
பெங்களூர் 1, டுபிளசிஸ், 2, விராட் கோலி, 3, ரஜத் பட்டிடார், 4. மேக்ஸ்வெல். 5. லோம்ரர், 6. தினேஷ் கார்த்திக், 7. ஷபாஷ் அகமது. 8. ஹசரங்கா, 9, ஹர்சல் பட்டேல். 10. முகமது சிராஜ். 11. ஹேசில்வுட்
ராஜஸ்தான்
1. ஜாஸ் பட்லர், 2. ஜெய்ஷ்வால். 3. சஞ்சு சாம்சன், 4.படிக்கல். 5. ஹேட்மயர். 6. ரியான் பராக். 7. அஸ்வின். 8. சாஹல். 9. போல்ட். 10. பிரசித் கிருஷ்ணா. 11. மெக்காய்