இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதனை படைத்த முதல் தமிழக வீரர் பிரக்ஞானந்தா - இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!
இளம் செஸ் போட்டியாளரான பிரக்ஞானந்தா சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் இறுதி போட்டி வரை முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா தற்போது நடைபெற்று வரும் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
PF கணப்பு வைப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? வட்டியின் முழு விவரம்
இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலக அளவில் நடைப்பெற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் போட்டியானது 16 வீரர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்ற இளம் வீரரான தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார்.
அதன் பின்னர், அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, இறுதி போட்டிக்கு சென்ற பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை-யிடம் முதல் சுற்றில் தோல்வியடைய, அடுத்த 2வது சுற்றில் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார்.
இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. பின், தொடர்ந்து டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிறிய தவறினால் சீன வீரர் திங் லிரனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
இருப்பினும், இறுதி போட்டிக்கு தகுதிபெற்றதால் சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மனைவியை எப்பொழுதும் மகிழ்விக்க என்னென்ன செய்யலாம்?
கெளரவித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு கெளரவிக்கும் விதமாக இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. ஆனால் பணிக்கான அடிப்படையில், தனது 18 வயதில் தான் பிரக்ஞானந்தா பணியில் சேர்க்கப்படுவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
என்னடா புலிக்கு வந்த சோதனை - ஒற்றை ஆளாக 5 புலிகளை அடிக்கும் ஹுரோ; ட்ரெண்டிங் வீடியோ
பல லட்சம் ஊதியம்
இதுகுறித்து பேசிய பிரக்ஞானந்தா ஐஓசியின் இணைப்பு கடிதம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஐஓசியுடன் இருக்கும் பல செஸ் வீரர்களை நான் அறிவேன். அது அவர்களுக்கு எப்படி ஆதரவு அளிக்கிறது என்பது எனக்கு தெரியும்.
ஐஓசியில் இணைந்துள்ளது பெருமையாக உள்ளது. இவை என் செஸ் வாழ்க்கையில் ஆதரவாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரக்ஞானந்தா பணிக்கு ஊதியம் மட்டும் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.