தொடர் தோல்விக்கான காரணம் என்ன? உருக்கத்துடன் உண்மையை ஒப்புக்கொண்ட ரோகித சர்மா
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி நடப்பு தொடரில் தொடர்ந்து வரலாறு காணாத விதமாக 8 போட்டிகளில் தோல்வியடைந்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பல வீரர்களை ரோகித் பயன்படுத்தினாலும், தேவையான இடத்தில், ரோகித் உட்பட மும்பை அணி வீரர்கள் ஜொலிக்காததே காரணமாக அமைந்தது.
ஜொலிக்காத மும்பை வீரர்கள்
அதிலும், 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இஷான் கிஷனும், மும்பை அணியில் எப்போதும் பினிஷ்ராக இருக்கும் பொல்லார்ட், தொடர்ந்து ஓப்பனிங்க் பேட்டிங் சொதப்பி வரும், ரோகித் சர்மா, மிடில் ஆர்டரில் அவ்வவ்போது விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் இவர்களின் செயல் திறன் தான் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
சொல்லப்போனால், மும்பை அணியில், பும்ராவின் அட்டாக் பவுலிங்கிற்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகளே விழாதது பெரிய ஏமாற்றம். இவர்களை தாண்டி மும்பை அணியின் பவுலிங் படு மோசமாக ஒவ்வொரு போட்டியிலும் அமைந்துள்ளது.
கடைசி ஓவரில் சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!
உருக்கத்துடன் ரோகித்
இதுகுறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, எந்த ஒரு இடத்திலும் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இந்த தொடர் முழுவதுமே மும்பை அணி இப்படி தொடர் தோல்விகளை சந்திக்க பேட்டிங் சரியில்லை என்பது மட்டுமே காரணம்.
மிடில் ஆர்டரில் இன்னும் அதிக பொறுப்பை எடுத்து பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டியது அவசியம். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும்.
ஆனால் இந்த தொடர் முழுவதுமே எங்கள் அணி வீரர்கள் யாரும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வில்லை. மற்ற அணி வீரர்கள் எங்கள் அணிக்கு எதிராக ஒரு நீண்ட இன்னிங்சை விளையாடும் போது எங்கள் அணியில் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்சை விளையாட முடியாமல் போ-னதே இந்த தொடரில் நாங்கள் அடைந்த தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த முறை அணியில் பல மாற்றங்கள் இருந்ததால் பல விதங்களில் நாங்கள் வீரர்களை உபயோகப்படுத்தி பார்த்தோம். இறுதியில் தோல்வியே மிஞ்சியது இருந்தாலும் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்கும் போது அவரிடமிருந்து நல்ல ஆட்டம் வெளிவரும் எனவும், கூறினார்.
ட்விட்டரில் உருக்கம்
மேலும், தற்போது வெளியிட்ட ட்விட்டர் பதிவிலும், “நாங்கள் இன்னும் இந்தத் தொடரில் எங்களது தடத்தை முன்னோக்கி எடுத்து வைக்காமல் உள்ளோம்.
ஆனால், இது எல்லோருக்கும் நடக்கும். பல்வேறு விளையாட்டு ஜாம்பவான்கள் இதனைக் கடந்து வந்திருப்பார்கள். நான் இந்த அணியையும், அதன் சூழலையும் நேசிக்கிறேன்.
அதே நேரத்தில் அணியின் மீது நம்பிக்கை வைத்த ஆதரவாளர்களை எண்ணி பெருமை கொள்கிறேன் நன்றி என தெரிவித்துள்ளார்.
We haven’t put our best foot forward in this tournament but that happens,many sporting giants have gone through this phase but I love this team and it’s environment. Also want to appreciate our well wishers who’ve shown faith and undying loyalty to this team so far ?@mipaltan
— Rohit Sharma (@ImRo45) April 25, 2022