படம் எடுத்து நின்ற நாகப்பாம்பு... பூஜை செய்து அனுப்பி வைத்த பக்தர்! வைரலாகும் காணொளி
ஆந்திரப் பிரதேசத்தின் ஏலுரு மாவட்டத்தில் ஒரு பக்தர் நாகப்பாம்புக்கு பூஜை செய்யும் போது, பாம்பு அசையாமல் பூஜையை அனுமதித்து அமைதியாக இருந்த நம்பமுடியாத தருணத்தின் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ஒரு பக்தர் வழக்கம்போல் தான் பூஜை செய்யும் இடத்துக்கு வந்தபோது, அங்கு ஒரு நாகப்பாம்பு இருந்ததை கண்டு, குறித்த பக்தர் அதனை தெய்வமாக எண்ணி, மரியாதையுடன் பூஜை செய்து, வணங்கியுள்ளார்.

பாம்பு பக்தரை நோக்கி அமைதியாக சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில், எந்த ஆபத்தும் இல்லாமல் பாம்பு திடீரென அந்த இடத்திலிருந்து சென்றுள்ளது.
இதனை பார்த்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்; சிலர் இதனை தெய்வத்தின் அருள் எனக் கூறி வருகின்றனர்.

அந்த நிகழ்வை அருகில் இருந்த தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்த்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பல்வேறு விதமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        