ஐபிஎல் பார்க்கப் போய் ஏமாந்து வீடு திரும்பிய திரைப் பிரபலங்கள்: யார் யார் தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள 10 அணிகள் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு இரண்டு அணி தகுதியாகியுள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவிருந்தது. இந்த இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் நரேந்திரமோடி மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு ஆரம்பிக்க இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பெரும் ஆராவரத்துடன் இரு அணிகளுக்கு சப்போட் செய்து வரும் ரசிகர்கள் இறுதிப் போட்டிக்காக கொண்டாடி காத்துக் கொண்டிருந்தார்.
முழு உலகமே சென்னை சுப்பர் கிங்ஸ் இன் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவும் தல தோனிக்காகவும் காத்திருந்தார்கள். ஆனால் மழைக்குறுக்கிட்டு ரசிகர்களையும் போட்டியாளர்களையும் கொண்டாட விடாமல் தடுத்து விட்டது.
மழையால் நேற்று நடைபெறாமல் போன போட்டி அதே இடத்தில் அதே நேரத்தில் இன்று (29) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக விக்னேஸ் சிவன், வரலட்சுமி சரத்குமார், சௌதர்யா ரஜினிகாந்த், ஜோனிதா காந்தி, சதீஸ் என பலர் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்கள்.