நட்சத்திர நாயகனுக்கு 12 லட்சம் அபராதம்!
ஐ.பி.எல் போட்டியில் நட்சத்திர நாயகனுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் 2023
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள 10 அணிகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கினர்.
இந்நிலையில் 32ஆவது போட்டியில் சன்ரைஸ் ஐதராபாத் அணியும் டெல்லி அணியும் மோதிக்கொண்டது.
இதில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களைக் பெற்றது. அடுத்த இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 137 ரன்கள் மட்டுமே பெற்றிருந்தது.
ஆக இந்தப் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிப் பெற்றது.
டேவிட் வோர்னருக்கு அபராதம்
இந்தப் போட்டியில் டெல்லி அணியின் கெப்டனான டேவிட் வோர்னருக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியில் டெல்லி அணி பந்து வீச தாமதமான காரணத்தால் அணித் தலைவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. முதல் தடவையாக இந்த அணி குறித்த தவறை செய்ததால் ஐபி.எல் நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.