அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு அதிர்ச்சியான பதிலளித்த தோனி!
ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்விக்கு பின் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. தொடர்ந்து கேப்டனாக சொதப்பி வந்த ஜடேஜா, தோனியிடமே கேப்டன் பதவியை கொடுத்துவிட்டார்.
இன்றைக்கான போட்டியில் தோனி கேப்டன் பதவியை தொடர்ந்தார். இன்றைய 46 ஆவது லீக் போட்டியில் கேப்டனாக டாஸ் போட மைதானத்திற்கு வந்தார்.
இந்த போட்டியில், டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதலில் விளையாடி முடித்துள்ள சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது.
அருமையாக தொடக்கம் தந்த ருதுராஜ் மற்றும் கான்வே, அரைசதம் அடித்தனர். ருதுராஜ் 99 ரன்களில் அவுட் ஆக, கான்வே 85 ரன்களுடனும், நாட் அவுட் ஆகவும், தோனி 8 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் விளையாடி வருகிறது.
Breaking; தொடர் தோல்வி... கேப்டன் பதவியை தோனியிடமே ஒப்படைத்த ஜடேஜா!

தோனியின் பதில்
இந்நிலையில், டாஸ் போட தோனி மைதானத்திற்கு வந்ததும் வர்ணனையாளர் அவரிடம் அடுத்த ஆண்டு மீண்டும் உங்களை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தோனியும், “நிச்சயம் என்னை நீங்கள் மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க முடியும். ஆனால் அது ஒரு வீரராக விளையாடுவதாக இருக்கலாம் அல்லது வேறு வகையிலும் இருக்கலாம் தற்போதைய சூழலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை வைத்து பார்த்தால், இந்த பேட்டியின் மூலம் நிச்சயம் தோனி அடுத்தாண்டு விளையாடுவார் என்றே தெரிகிறது.
அப்படி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் சென்னை அணியில் ஒரு முக்கிய பொறுப்பில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.