தமிழக வீரரின் மோசமான அவுட் - குஜராத் அணி கேப்டன் கொந்தளிப்பு! வீடியோ
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 177/6 ரன்களை குவித்தது.
பின்னர், களமிறங்கிய குஜராத் அணி சிறப்பாக விளையாடியது, விருதிமான் சாஹா 55 ரன்கள், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
ஆனால், பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள், சாய் சுதர்சன் 14 ரன்கள், ராகுல் தேவட்டியா 19 ரன்கள் என வெளியேறினர்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டாலும், வெற்றி பெறாமல் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில், குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக தமிழக வீரரான சாய் சுதர்சனின் ஹிட் அவுட் தான் போக்கை மாற்றியதாக கருத்துகளை கூறிவருகின்றனர்.
கழட்டிவிடப்பட்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக புதிய சாதனையை படைத்த வார்னர் - டி20யில் முதலிடம்!
ஹர்திக் பாண்டியாவின் கோபம்
இதுகுறித்து, குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், சாய் சுதர்சன் இருந்த ஃபார்மிற்கு நிதானமாக விளையாடி இருந்தால், சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், எந்தவித நியாயமும் இன்றி மோசமாக அவுட்டானது மற்ற வீரர்களுக்கும் பதற்றத்தை உருவாக்கியது என தெரிவித்துள்ளார்.
இதனால், கோபப்பட்டுள்ளார். மேலும், ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி அவுட் சாதாரணமல்ல, இதுபோல் நிறைய போட்டிகளில் நிறைய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகியுள்ளனர்.
அதனால் சாய் சுதர்சனை விமர்ச்சிப்பதை நிறுத்திவிட்டு, போட்டி போட்டியாய் பாருங்கள் என நெட்டிசன்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
— Jemi_forlife (@jemi_forlife) May 6, 2022