கழட்டிவிடப்பட்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக புதிய சாதனையை படைத்த வார்னர் - டி20யில் முதலிடம்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. அதன் படி முதலில் டெல்லி அணி 20 ஓவர்களில் 207-3 ரன்களை குவித்தது.
இதன் பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 186-8 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. இப்போட்டியில், 58 பந்துகளை சந்தித்த வார்னர் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 92 ரன்களை விளாசினார்.
58 பந்துகளை சந்தித்த வார்னர் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 92 ரன்களை விளாசினார். இவருக்கு துணையாக ஆடிய ரோவ்மென் போவெல் 35 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.
இவர்களை கடைவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாததால் 20 ஓவர்களில் டெல்லி அணி 207 ரன்களை குவித்தது.

சாதனை படைத்த டேவிட் வார்னர்
இந்நிலையில், வார்னர் ஐதராபாத் புரட்டி எடுத்தாலும், ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது நேற்றைய போட்டியில் வார்னர் 34 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தான் இருந்து வந்தார். இதற்குமுன் ஹைதராபாத் அணிக்கா விளையாடி வார்னர், கடந்த 2014 முதல் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 2016ல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தார்.
சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா? 4வது இடத்திற்கு போட்டிபோடும் 5 அணிகள்;
ஆனால், டேவிட் வார்னரை 2021-ல் முதல் முறையாக ரன்கள் அடிக்க தடுமாறினார் என்பதற்காக அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.
இருந்தாலும், வார்னர் அதன் பின்னர் டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தொடர் நாயகன் விருதையும் வென்று கொடுத்தார்.
கெயிலின் சாதனையை முறியடித்த வார்னர் பட்டியலில் முதலிடத்தில் இணைந்துள்ளார்.
1. டேவிட் வார்னர் 89* (321 போட்டிகள்)
2. கிறிஸ் கெயில் : 88 (463 போட்டிகள்)
3. விராட் கோலி : 77 (337 போட்டிகள்)