மும்பை அணியை பந்தாடிய இளம் வீரர் - மாஸ் காட்டிய கோலி; அபார வெற்றி!
ஐபிஎல் இன்று இரவு போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கத்தில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நிதானத்தை கடைப்பிடித்து ரன்களை குவித்தாலும், ரோகித் 26 ரன்களில் அவுட் ஆக, கிஷானும் 26 ரன்களில் வெளியேறினார்.
அதன் பின்ன விக்கெட்டுகளை மும்பை அணி பறிகொடுக்க மறுபக்கம் தூண்ணாக நின்று சூர்யகுமார் யாதவ் வெளுத்து வாங்கினார். கிட்டத்தட்ட இறுதி வரை நின்று 68 ரன்கள் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இதனால் மும்பை அணி 151 ரன்களை குவித்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி கேப்டன் டூ ப்ளசிஸ் 16 ரன்களில் வெளியேறினார்.
சென்னை அணியின் தொடர் தோல்வி - ப்ளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?

வெளுத்து வாங்கிய இளம்வீரர்
அடுத்து வந்த விராட் மற்றும் அனுஜ் இருவரும் ஜோடி சேர்ந்து மும்பை அணி பவுலிங்கை வெளுத்து வாங்கினார்கள். ஐபிஎல் போட்டில் தனது முதல் அரைசதத்தை கடந்த அனுஜ் ராவத் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுபக்கம் 48 ரன்களில் விராட்கோலி அவுட் ஆகி வெளியே செல்ல மேக்ஸ்வெல் வந்தவுடன் இரண்டு பவுண்டரியை விளாசி பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

தொடர் தோல்வி
இதனால், மும்பை அணி சென்னை அணியை போல் 4 தோல்வியை சந்தித்து அபாய கட்டத்தில் உள்ளது.
ஐபிஎல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை சென்னை அணி தொடர் தோல்விகளை சந்திப்பதால், மீம்ஸ்கள் இணையத்தில் அனல் பறக்கின்றன....