சென்னை அணியின் தொடர் தோல்வி - ப்ளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?
ஐபிஎல் 2022-க்கான போட்டியில் இன்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.
சென்னை அணியின் பேட்டிங்கில், தமிழக வீரர்கள் ஆனா வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள்.. சென்னை வீரர் உத்தப்பா ஓபன் டாக்!
தொடர் தோல்வி
அதன் பின்னர், மொயின் அலி 48 ரன்களும், ராயுடு 27 ரன்களும் எடுத்தனர். ஷிவம் டுபே 3, தோனி 3 என சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணியின் ரன் ரேட் குறைந்தது.
20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து இந்த முக்கியமான போட்டியில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஜதராபாத் அணியை 12 ஓவர்கள் வரை ஒரு விக்கெட்டுகளை கூட எடுக்க முடியாமல் சென்னை அணி தடுமாறியது.
6 பவுலர்களை பயன்படுத்தியும் சென்னை அணியால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஹைதராபாத் அணி 89 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது.
சென்னை அணி வெளியேறுமா?
கேப்டன் கேன் வில்லியம்சன் 32 ரன்களில் வெளியேற மறுபக்கம் சென்னை அணியை கதற வைத்த அபிஷேக் சர்மா 75 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 39 ரன்களை விளாசினார்.
இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணி இந்த ஆண்டு தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.
இன்னும் ஒரு போட்டியில் சென்னை தோற்றாலும் கூட சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு தவிடு பொடியாகிவிடும்.