பெங்களூர் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் போட்டியின் நேற்றைக்கான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், தேவ்தட் படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. ஆரம்பத்தில் சரிக்கிய இருவரும், முதல் ஓவரிலேயே படிக்கல் 7 ரன்களில் வெளியேறினார். 3-வது ஓவரில் 17 ரன்களுடன் அஸ்வினும், 4-வது ஓவரில் 8 ரன்களில் பட்லரும் நடையைக்கட்டினர்.
ரன்கள் சேர்த்திருந்த சஞ்சு சாம்சனை 9-வது ஓவரில் வனிந்து ஹசரங்கா போல்டாக்கினார். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
டேரில் மிட்செல் 16 ரன்களுடனும், ஹெட்மேயர் 3 ரன்களுடனும், போல்ட் 5 ரன்களுடனும், பிரஷீத் கிருஷ்ணா 2 ரன்களுடனும் வெளியேறினர்.
இதில் ரியான் ப்ராக் மட்டும் 31 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.

தொடர்ந்து 145 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு இம்முறை பாப் டு பிளஸிஸ் உடன் விராட் கோலி ஓப்பனிங் செய்தார். வழக்கம்போலவே விராட் கோலி 9 ரன்னில் அவுட் ஆகி செல்ல, டு பிளஸிஸ் 23 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் சென் ஓவரில் அவுட் ஆனார்.
டு பிளஸிஸ் வெளியேறிய பின் வந்த அனைத்து வீரர்களும் வருவதும் போவதாக இருந்தனர். இதனால் 13ஓவரிலேயே 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி.
ஷாபாஸ் அகமது மற்றும் வணிந்து ஹஸரங்கா இருவரும் சில ஓவர்கள் தாக்குப்பிடித்தாலும் அவர்களிலும் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பெங்களூரு அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. பெங்களூர் அணி 5வது இடத்திற்கு சென்றது.