6வது முறையாக மும்பை தொடர் தோல்வி - ரோகித்தால் அதிருப்தியில் சச்சின்; சாதனை படைத்த ராகுல்
ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சச்சின் மகனை புறக்கணித்த ரோகித்
ஏற்கனவே முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்திருந்த மும்பை அணி, இந்த முறை அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு ஒரு மாற்றமாக, ரோகித் ஃபாபியன் ஆலன் ப்ளேயிங் 11 கொண்டு வந்தார் ரோகித்.
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்க நிலையில் அதையும் தவறிவிட்டார் ரோகித்.
பிக்பாஸ் பிரபலத்துடன் ஊர் சுற்றும் அபிராமி! எப்போ கல்யாணம் என கேட்ட ரசிகர்கள்

அர்ஜூனுக்கு உள்நாட்டு தொடரில் பெரியளவில் அனுபவம் இல்லை என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருந்தாலும், ஒருமுறையாவது பயன்படுத்தலாமே என்பது தான் ரசிகர்களின் கோபம்.
சச்சினே இதற்கு அதிருப்தியில் இருப்பதாக தான் தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ அணி முதலி பேட்டிங்கில் சரமாரியாக கேப்டன் ராகுல் வெளுத்து வாங்கு மும்பை அணிக்கு எதிராக இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

சாதனை படைத்த கேஎல் ராகுல்
அதிலும் 100வது ஐபிஎல் போட்டியில் 100 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். 60 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை விளாசினார். ணிஷ் பாண்டே 29 பந்துகளில் 38 ரன்களும், தீபக் ஹூடா 8 பந்துகளில் 15 ரன்களையும் விளாசினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா 6 ரன்களில் வழக்கம் போல் அவுட் ஆகி ஏமாற்றினார்.
சொதப்பிய ரோகித்
இஷான் கிஷான் 13 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினர். இதன் பின்னர் வந்த டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பிரேவிஸ் 13 பந்துகளில் 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 37 ரன்களையும் விளாசினர்.
இவர்களுக்கு உறுதுணையாக திலக் வர்மா 26 ரன்களை சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். பொல்லார்ட் 14 பந்துகளில் 25 ரன்களை மட்டும் சேர்த்தும் வெளியேறினார்.

6 வது முறையாக தோல்வி
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து மும்பை அணியால் 181 ரன்களை மட்டுமே எடுத்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியையே தழுவியது.
6வது முறையாக தொடர் தோல்வியை சந்தித்த முதல் அணியாக மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பும் இத்தோடு முடிவுக்கு வந்தது. இதனால் மும்பை ரசிகர்கள் மட்டுமின்றி ரோகித்தை முன்னாள் வீரர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.