LSGvsGT: அறிமுக ஆட்டத்திலேயே துவம்சம் செய்த வீரர் - யார் இந்த பதோனி?
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பரிகொடுத்தது.
மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய தீபக் ஹூடா(55), பதோனி(54) எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அறிமுக போட்டியிலேயே டெல்லியைச் சேர்ந்த இளம்வீரர் பதோனி அற்புதமான ஆட்டத்தை ஆடி, தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்தார்.
என்னதான் லக்னோ அணி குஜராத் அணியிடம் தோற்றாலும், அரைசதம் அடித்த இளம் வீரர் பதோனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதன்மூலம், ஆயுஷ் பதோனி, 41 பந்தில் 54 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் அறிமுகத்தில் அரைசதம் அடித்த மூன்றாவது இளம் வயதில் வீரர் என்ற சாதனை படைத்தார்.

என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!
யார் இந்த பதோனி?
யார் இந்த பதோனி என கேட்டால், முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கவனிக்கப்பட வேண்டிய மூன்று பேட்டர்களில் இவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பதோனி டெல்லி கிரிக்கெட் வீரரின் தந்தை வடக்கு டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் வசிக்கும் ஆவணப்பட தயாரிப்பாளர் ஆவார்.
தந்தை அவருடன் சிமெண்ட் ஆடுகளத்தில் மணிக்கணக்கில் பயிற்சி செய்வார். இறுதியில், மறைந்த பயிற்சியாளர் தாரக் சின்ஹாவின் வழிகாட்டுதலுடன் டெல்லியின் புகழ்பெற்ற சானட் கிளப்பிற்காக விளையாடத் தொடங்கினார்.
போட்டியில் கேல் ராகுல் க்ருணால் பாண்டியாவை நிறுத்தி விட்டு பதோனியை பேட் செய்ய அனுப்பினார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், LSG ஆல் அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்தில் எடுக்கப்பட்டார், மேலும் அவரை ஆதரித்ததற்காக கௌதம் கம்பீருக்கு நன்றி தெரிவிக்க பதோனி மறக்கவில்லை.

வாய்ப்பு கொடுத்த காம்பீர்
இதுகுறித்து அவர் பேசுகையில், “டெல்லி அணிக்காக விளையாடும் போது எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
கெளதம் கம்பீர் தான் எனக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார். என்னுடைய இயற்கையான விளையாட்டையே விளையாட சொன்னார்.
என்னை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அவரது அறிவுரை எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.