ஐபிஎல் 2022: நான் சமையல்காரனாக இருந்துவிடுகிறேன்.. மனமுடைந்து பேசிய சுரேஷ் ரெய்னா
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து மனமுடைந்து சுரேஷ் ரெய்னா தெரிவிக்கையில், “நம்மிடம் என்ன திறமை உள்ளது என்பது நமக்கு தெரியும். கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது. நான் ஒரு நலல சமையம்காரனாக ஆக விரும்புகிறேன். எனக்கு மிக நன்றாக சமைக்கத் தெரியும் எனக்கூறினார்.
மேலும், கிரிக்கெட் என்பது எனது ஒரே காதல். கிரிக்கெட்டில் உறுதியாக இருப்பேன். நான் சமையல்காரனாக மாற விரும்புகிறேன். ஒவ்வொரு சமையலையும் நன்றாக சமைத்து ஒவ்வொரு இடத்துக்கு சென்று பார்க்க விரும்புகிறேன்.
இளம் கிரிக்கெட் வீரர்கள் தற்போது பல்வேறு வகையான மன அழுத்தங்களை கொண்டுள்ளனர். 2, அல்லது 3 தொடர்களுக்கு மேல் எதிர்ப்பார்ப்பு அவர்கள் மேல் இருப்பதால் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதே போல் ஒரு பயிற்சியாளரருக்கு தனது அணியின் எதிர்காலம் குறித்த நீண்ட நாள் திட்டமும் இருக்கும். மேலும், உங்களுக்கு 5, அல்லது 10 போட்டிகள் வழங்கப்படும்.
இதில் இரண்டு அல்லது மூன்று சுற்றுப்பயணங்களில் நீங்கள் அணியுடன் விளையாடும் போது, நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், உங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும். அது ஒரு கற்றல் நடைமுறை,” என்று ரெய்னா கூறினார்.