ஐபிஎல் 2022 முதல் போட்டி: சென்னை - கொல்கத்தா வெல்லப்போவது யார்? முழு விபரம்
ஐபிஎல் 2022க்கான முதல் போட்டி நாளை மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி மே 29-ம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. 10 அணிகள் விளையாடுவதால், 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகளை காண 25% ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதனிடையே இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வெல்லப்போகும் அணி எது?
இரவு 7.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரை வெற்றிகரமாக துவங்குவதற்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
சென்னை அணியை பொறுத்தவரை நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதே கொல்கத்தாவை தோற்கடித்தது. மேலும், சென்னை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தால் விலகியது மிகப்பெரிய பின்னடைவாகும்.

அதேப்போல், பாப் டு பிளசிஸ், ஷார்துல் தாகூர் ஆகியோர் இம்முறை இல்லாததும் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு தான்.
இருந்தாலும், ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, உத்தப்பா, ராயுடு என ரவீந்திர ஜடேஜா தலைமையில் புதிய பயணத்தை தொடங்கும். ரவீந்திர ஐடேஜாவுக்கு தோனி பக்க பலமாக இருப்பார்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை கடந்த வருடம் சென்னையிடம் தோல்வியடைந்ததால், பழிக்கு பழி வாங்க காத்திருக்கும். அதுவும் செம்ம ஃபார்மில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஸியால் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
கடந்த முறை டெல்லி அணியை இறுதி வரை கொண்டு சென்றார். அந்த அணியில் வெங்கடேஷ் ஐயர், வருன் சக்ரவர்த்தி போன்ற இளம் வீரர்களும் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் போன்ற தரமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளதால் சென்னைக்கு ஈடு கொடுத்து கொல்கத்தாவும் வெற்றிக்கு போராடும்.

புள்ளி விவரம்
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அதில் 17 போட்டிகளில் சென்னை அணியும், வெறும் 8 போட்டிகளில் மட்டுமே கொல்கத்தா அணியும் வெற்றி பெற்று உள்ளது.
மேலும், இந்த மைதானத்தின் பவுண்டரிகள் அளவில் சிறியது என்பதால் பொதுவாகவே இங்கு பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள்.
அதேபோல் இந்த மைதானத்தில் இயற்கையாகவே சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமும் காணப்படலாம். அதற்கு ஈடாக திறமையை வெளிப்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுக்கக்கூடும்.
இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 167 ஆகும். இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து அதன் பின் சேசிங் செய்வது வெற்றியை பெறலாம்.