பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய டெல்லி அணி - 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் போட்டியின் 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைக்கான போட்டியில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் 24 ரன்களிலும் தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து, ஜித்தேஷ் ஷர்மா மட்டுமே 32 ரன்களை அடித்து அவுட்ட ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வார்னர் மற்றும், ப்ரித்வி ஷா பஞ்சாப் அணியின் பவுலர்களை கதி கலங்க வைத்தனர். இருவரும் ஜோடி சேர்ந்து ப்ரித்வி ஷா 41 ரன்களில் ராகுல் சாஹர் ஓவரில் அவுட் ஆனார்.
அதைத்தொடர்ந்து, மறுபக்கம் டேவிட் வார்னர் அசல்டாக பவுண்டரிகளை விரட்ட, அவருக்கு பக்கபலமாக சர்பராஸ் கான் 12 ரன்களை அடித்த நிலையில், வார்னர் 4 ரன்களை அடித்து, 30 பந்துகளில் 60 ரன்களில் நாட் அவுட் ஆக டெல்லி அணி வெற்றியை பதிவு செய்தார்.
இதனால் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
What a way to return to winning ways! ? ?@DelhiCapitals put up a dominant show & sealed a clinical 9⃣-wicket win over #PBKS. ? ?
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
Scorecard ▶️ https://t.co/3MYNGBm7Dg#TATAIPL | #DCvPBKS pic.twitter.com/6YpYU4bh18