அந்த தவறுதான் தோல்விக்கு காரணம் - ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கேப்டன் தோனி உருக்கம்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 173 ரன்களை அடித்திருந்தது.
174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தோல்வி குறித்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தியாக இருந்தது. 170 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் நிச்சயம் சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம்.
ஆனால், இரண்டாவது பேட்டிங் செய்யும் போது மைதானம் பேட்டிங்க்கு அதிகளவு ஒத்துழைப்ப்யு தரும் என்று நினைத்தேன். அதன்படியே துவக்க வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள்.
அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு அதிர்ச்சியான பதிலளித்த தோனி!

உருக்கத்துடன் தோனி
ஆனால் மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததுனால், சரிவில் இருந்து மீள முடியவில்லை. சிறப்பான பாட்னர்ஷிப் கிடைக்காமல் போனதே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் சேசிங் செய்ய எவ்வளவு ரன்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில ஷாட்டுகளை ஆடி இருக்கவேண்டும். ஆனால் அப்படி விளையாட முடியவில்லை.
விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் அடுத்தடுத்து இழந்து வந்ததால் ரிஸ்க் எடுக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஒரு சில தவறுகளை சரி செய்தாலே நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும்.
ஆனால் இந்த போட்டியில் எங்களால் அதனை சரிவர செய்ய முடியவில்லை என கேப்டன் தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடப்பு தொடரில் சென்னை இந்த தோல்வியின் மூலம் கிட்டத்தட்ட உறுதியாகவே ப்ளே ஆஃப் சுற்றை இழந்து வெளியேறியுள்ளது.