ஐபிஎல் 2022 : 10 அணிகள் பங்கேற்பதால் புதிய மாற்றத்தை கொண்டு வந்த பிசிசிஐ
ஐபிஎல் 2022-க்கான போட்டிகள் வரும் மே மாதம் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. 74 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணி மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் 4 லீக் சுற்று போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 10 அணிகள் பங்கு பெறுவதால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றில் புதிய மாற்றங்கள் நிகழ உள்ளது.
அவை, கடந்த சீசன்களில் நடந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்றதால் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் 14 போட்டிகளில் விளையாடின.
ஆனால் இந்த முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் அவ்வாறு லீக் சுற்றுப் போட்டிகளை நடத்தினால் 90 போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அதற்கு பதிலாக புதிய பார்மட் இந்த ஐபிஎல் தொடரில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த வருடம் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அதில், ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றிருக்கும். முதல் குரூப்பில் இருக்கும் ஒரு அணி அதே குரூப்பில் உள்ள எஞ்சிய 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும்.
அதேசமயம் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள 4 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். அதோடு குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஒரு அணியுடன் 2 போட்டிகளில் மோத வேண்டும். அந்த ஒரு அணி ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
எடுத்துக்காட்டாக குரூப் ஏ பிரிவில் உள்ள அணி ஒன்று, அதே பிரிவில் இடம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். இந்த வகையில் 8 போட்டிகள் நடைபெறும்.
அதே சமயத்தில், குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஜே அணியுடன் 2 போட்டிகளில் மோத வேண்டும். குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இந்த வகையில் 6 போட்டிகள் நடைபெறும் என்பதால் லீக் சுற்றின் முடிவில் ஒரு அணி வழக்கம் போல 14 போட்டிகளில் விளையாடிருக்கும்.
இந்த அணிகள் ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஏற்கனவே இந்த ஃபார்மட் கடந்த 2011 தொடரில் கடைபிடிக்கப்பட்டதுள்ளது.