ஏலத்துக்கு வந்த பிரிக்கப்படாத ஒரிஜினல் முதல் ஐபோன் - விற்பனையான விலை என்ன தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் முதல் மாடலான 35 ஆயிரம் டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், நடைப்பெற்ற ஏலத்தில் நடைப்பெற்ற பிரிக்கப்படாத 2007 ஐபோன் மாடல் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
2007 ஜனவரி 9-ம் தேதி அப்போதைய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை அறிமுகம் செய்தார்.
இந்த ஐபோன் மாடலில்,தொடுதிரை வசதி, ஐபாட், கேமரா, பிரவுசிங் வசதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த மாடலில் தொடுதிரை, 2MP கேமரா, விஷூவல் வாய்ஸ் மெயில், வெப் பிரவுசர் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த ஐபோன் விற்பனை அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேக்வொர்ல்டு கன்வென்ஷனில் நடைபெற்றது.
அதன்படி, ஐபோன் 4 ஜிபி மாடல் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரத்து 884 என்றும் 8 ஜிபி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 877 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், ஆர்ஆர் ஆக்ஷன் நிறுவனம் சிறிதளவும் பிரிக்கப்படாத ஐபோன் பாக்ஸ்-ஐ ஏல விற்பனைக்கு அறிவித்து இருந்தது.