ஆப்பிள் iPhone 16 பிளான் லீக்... ரகசியத்தை போட்டுடைத்த நெட்டிசன்கள்
ஆப்பிள் iPhone 16 அறிமுகமாகும் முன்பே அதன் முக்கிய தகவல்கள் அனைத்தும் லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் iPhone
ஆப்பிள் நிறுவனத்திலிருந்து புதிதாக வரவிருக்கும் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மொபைல்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ஐபோன் 16, 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ், 16 பிளஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவைச் சேர்ந்த டெக் ஆர்வலரான Ming-Chi Kuo ட்விட்டர் பக்கத்தில், கருப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
ஐபோனின் தோற்றத்தைப் பொறுத்தவரை, வெர்ட்டிகிள் டூயல் கேமரா அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முந்தைய தலைமுறை ஐபோன்களை வேறுபடுத்திக் காட்ட, புளூ டைட்டானியத்துக்குப் பதிலாக ரோஸ் வரும் எனத் தெரிகிறது.
ஐபோன் 15 ப்ரோ சீரிஸில் உள்ள பிரஷ்டு ஃபினிஷுக்குப் பதிலாக, ஐபோன் 16 மாடல்கள் பளபளப்பான ஃபினிஷ் கொண்டிருப்பதுடன், டைட்டானியம் பிரேமைக் கொண்டிருக்குமாம்.
ஐபோன் 15 ப்ரோ சீரிஸில் இருந்து ஆப்பிள் துருப்பிடிக்காத ஸ்டீலுக்குப் பதிலாக டைட்டானியத்தை பயன்படுத்த ஆரம்பித்தத நிலையில், ஐபோன் 16 மாடல்களிலும் இதுவே தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |