அதிரடியாக குறைந்த iphone 15-ன் விலை... தற்போது எவ்வளவு தெரியுமா?
iPhone 15ன் விலை தற்போது அதிரடியாக குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை ஆகியுள்ளது பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
iPhone 15
ஐபோன் 15 மொபைலை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதன் விலை அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அமேசான் பிளிப்கார்டில் ஐபோன் 15 பாதி விலையில் கிடைக்கின்றதாம். ஆனால் குறைந்த விலையில் வாங்குவதற்கு ஐபோன் மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டு இருக்க வேண்டுமாம். இது வைத்திருந்தால் நீங்கள் தள்ளுபடி பெறலாம்.
ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் 15 128 ஜிபி மாடலை 5 சதவீதம் தள்ளுபடியில் ரூ.75,900க்கு வாங்கலாம். அமேசான் எக்ஸ்சேஞ்ச் சலுகையிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.34,500 ஆக குறைகிறது. அனைத்து தள்ளுபடி சலுகையை பயன்படுத்திய பின்பு 41,400 ரூபாய்க்கு வாங்கலாம்.
இது தவிர, பிளிப்கார்ட்டில் ரூ.37,500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஒப்பந்தமும் கிடைக்கிறது, இதில் ரூ.3,000 வரை கூடுதல் சலுகையும் உள்ளது. இதிலும் குறித்த கிரெடிட் கார்டு இருந்தால் ஐந்தாயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.
இந்த போனின் விலை ரூ.40,000 ஆக குறைகிறது. அதே நேரத்தில், ஐபோன் 15 ஐ இன்னும் மலிவாக வாங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 இம்முறை வேகமான ஏ16 பயோனிக் சிப்செட்டுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் 48 எம்பி முதன்மை கமெராவைக் கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |