ஐபோன் வாங்க போறீங்களா? எது பெஸ்ட்னு தெரிஞ்சிக்கோங்க
ஐபோன் என்பது பலரது நீண்ட நாள் கனவாக இருக்கும் இந்நிலையில், புதியதாக ஐபோன் 15 சீரிஸ் வெளியாக உள்ளது. இவை அதிக விலையாக இருக்கும் என்று யோசிக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஐபோனை குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐபோன்
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஐபோன் 15 சீரிஸ்ஸை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய ஐபோன் 15 சீரிஸ், குபெர்டினோ-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனத்தால் கம்ப்யூட்டிங் செயல்முறை மற்றும் புகைப்படம் எடுப்பதில் பெரிய மேம்பாடுகளைக் காணலாம்.
ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மார்க்கெட்டில் இப்போது இருக்கும் சிறந்த ஐபோன்களைப் பற்றி பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 11:
ரூ 41,999 ஆப்பிள் ஐபோனின் 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டை ரூ.41,999க்கு வாங்கலாம். ஃபேஸ் ஐடி சிஸ்டத்துடன் இருக்கும் இந்தபோனில் விலை குறைவு என்றாலும் இதில் 5ஜி ஆதரவு இல்லை. குறித்த ஸ்மார்ட்போனில் 720p தெளிவுத்திறன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் IPS டிஸ்ப்ளே வருவதுடன் பேட்டரி ஆயுளும் நன்றாக இருக்கின்றதாம். 4ஜி இணைப்பு போதும் என்று நினைப்பவர்கள் இதனை வாங்கிக் கொள்ளலாம்.
ஆப்பிள் ஐபோன் 12:
ஆப்பிள் ஐபோன் 12ன் விலை ரூ 51,999 ஆகும். 50 ஆயிரத்திற்குள் ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த ஐபோன் சிறந்த ஒன்றாகும். இதில் 5ஜி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், OLED திரை, MagSafe வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறந்த இரட்டை கேமரா அமைப்புடன் காணப்படுகின்றது.
ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் 14:
சிறந்த கமெரா மற்றும் பேட்டரி ஆயுள் கொண்ட ஐபோன் 13ன் விலை ரூ 59,999 ஆகும். இதில் 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பகத்தை கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த போனில் சிறிய நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சிறந்த செயலி மற்றும் வடிவமைப்புடன் காணப்படும் ஆப்பிள் ஐபோன் 14 ரூ 67,999 ஆகும்.
Apple iPhone 14 Pro:
ரூ 1,19,999 இந்த பிரீமியம் ஐபோனை தற்போது தள்ளுபடியுடன் வாங்கலாம். டைனமிக் ஐலேண்ட் கொண்ட இந்த உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் மெட்டல் கிளாஸ் கட்டமைப்புடன் கைபேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், பெரிய திரையுடன் கூடிய iPhone 14 Pro Max ஐயும் வாங்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |