அதிரடி ஆஃபர் விற்பனையில் ஐபோன் 14... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ஐபோன் 14 மாடல் மிகவும் மலிவான விலையில் அமேசானில் தற்போது கிடைப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஐபோன் 14
அமேசான் நிறுவனம் ஐபோன் 14 வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான வாய்ப்பினை கொடுத்துள்ளது. நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவில் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஐபோன் 14 தள்ளுபடியைப் பொறுத்தவரையில், 128 ஜிபி மற்றும் நீல நிற வேரியண்ட் மொபைல் அசல் விலையில் இருந்து குறைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான இந்த மொபைலின் விலை ரூ.79,900 என்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 16 சதவீதம் தள்ளுபடியை அறிவித்து ரூ.67,499க்கு வழங்கப்படுகின்றது.
ஆம் ரூபாய்12,500 அடிப்படை விலையிலிருந்து குறைத்து கொடுக்கப்படுகின்றது. அதிலும் நீங்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய்க்கு 10% தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த தள்ளுபடி EMI-ல் கிடைக்கும். இதனுடன், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் EMI அல்லாத பரிவர்த்தனைகளைச் செய்யும்போது, 10% அதிகபட்சமாக ரூ.750 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
கூடுதல் சலுகையின் கீழ், SBI கிரெடிட்டிலிருந்து 9 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட EMI பரிவர்த்தனைகளைச் செய்யும் உங்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த ஐபோன் 14 ஸ்மார்ட்போனில் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு விருப்பங்கள் உள்ளது. மேலும் 5ஜி இணைப்பையும் பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இ-சிம் விருப்பத்தையும் கொண்டுள்ளது. ஐபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பொன்னான நேரத்தினை நிச்சயம் தவறவிட மாட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |