வெளியீட்டுக்கு முன்பே ஐபோன் 14 மாடல் அம்சங்கள் லீக்!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் பலருக்கும் வாங்க வேண்டும் என்ற அதீத பிரியம் உண்டு. ஐபோனில் இதுவரை 13 வரை மாடல்கள் வந்துள்ளன.
ஐபோன் 14 எப்போது வரும் என ஆவலுடன் பயனளார்கள் காத்திருக்கின்றனர். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வென்னிலா ஐபோன் 14 மாடல் பற்றிய தகவல் இந்திய வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த லீக்கில் ஐபோன் 14 ஸ்மார்ட்போன் A2882 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
ஸ்டாண்டர்டு ஐபோன் 14 மாடல் ஐபோன் 13 போன்ற தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
போனின் அம்சங்கள்
இந்த ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 90Hzப்ரெஷ் ரேட், ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் செல்பி கேமரா மற்றும் பேஸ் ஐடி சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும், புகைப்படங்களை எடுக்க 12MP டூயல் கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதுமட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிநவீன ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.