ஐபோன் 14 ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! முன்கூட்டியே பல மாடல்கள் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் பலருக்கும் வாங்க வேண்டும் என்ற அதீத பிரியம் உண்டு. ஐபோனில் இதுவரை 13 வரை மாடல்கள் வந்துள்ளன.
ஐபோன் 14 எப்போது வரும் என ஆவலுடன் பயனளார்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஐபோன் 14 சீரிஸ் ரிலீஸ் தள்ளிப்போடவில்லை முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் Fall event என்ற நிகழ்வை நடத்தும். அப்போது புதிதாக அறிமுகம் செய்யப்போகும் அனைத்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். ஆனால், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகள் ஆன்லைன் மூலமாகவே அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த ஆண்டு 14 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் தேதி மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
இந்த முறை, இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ₹79000 என்றும் இதனுடைய ஹையஸ்ட் மாடல் ₹1,00,000 வரைக்கும் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் மத்தியில் ஐபோன் 14 சீரி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது.
ஆனால் இடையில் தேதி மாற்றம் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து தற்போது ஐஃபோன் 14 அறிமுகம், செப்டம்பர் 7-ம் தேதியன்று நடைபெற இருப்பதாக சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.
மேலும், ஆப்பிள் நிறுவனம் இந்த முறை பல தயாரிப்பு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன்படி, ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸில், ஆப்பிள் 14 ஐஃபோன், ஆப்பிள் 14 ஐஃபோன் மேக்ஸ், ஆப்பிள் 14 ஐஃபோன் ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு புதிய மாடல்கள் வெளிவர இருக்கின்றன.
இதுமட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச்கிகள், ஏர் பாட்ஸ் மற்றும் பல்வேறு அக்சஸரீக்களும் வெளிவர இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது.