மொபைலில் Internet Slow-வா இருக்கா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்
நாம் மொபைலில் பயன்படுத்தும் இன்டெர்நெட்டின் வேகம் பிரச்சினையாக இருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
2ஜி, 3ஜி என்று Internet வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது 4 ஜி மட்டுமின்றி அதை விட வேகமாக இயங்கும் 5ஜி சேவையும் வந்துவிட்டது.
மொபைலில் Internet வேகமாக செயல்பட
நீண்ட காலமாக உங்களது மொபைலில் கேச் கிளினர் செய்யவில்லை என்றால் அதை அழித்துப் பாருங்கள். நிச்சயம் இணையத்தின் வேகம் அதிகமாகும்.
ஸ்மார்ட்போனில் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவையற்ற செயலிகளை Close செய்துவிட்டால் இணையத்தின் வேகம் அதிகரிக்கும்.
மொபைல் செயலிகளை ஆட்டோ அப்டேட் செய்யும் ஆப்ஷன் ஆன் செய்திருந்தால் அதனை ஆஃப் செய்து வைக்கவும். ஏனெனில் ஆட்டோ அப்டேட் செய்வதற்கு மொபைல் டேட்டா செலவாகும் என்பதால் இணையத்தின் வேகம் குறைந்துவிடும்.
நீங்கள் பயன்படுத்தும் Browser லைட் வெர்ஷனாகக் கிடைக்கும் என்பதால் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் இணையத்தின் வேகம் அதிகரிக்கும். Browser மட்டுமின்றி, மற்ற செயலிகளையும் லைட் வெர்ஷனாக மாற்றிக்கொள்ளலாம்.
மொபைல் நெட்வொர்க் செட்டிங் இயல்பாக தானாகவே இயங்கக்கூடியதாக இருந்தால், இணைய வேகத்தை குறைக்கும். ஆகவே மொபைலில் நெட்வொர்க் செட்டிங்ஸை ரீசெட் செய்து பார்க்கலாம். இது உங்களது இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |