பழைய கஞ்சியுடன் மீன் குழம்பு சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?
தற்போது பலர் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாகவும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாகவும் உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதனால் பலரும் இண்டர்மிட்டண்ட் உணவுமுறை பின்பற்றி வருகிறார்கள்.
இந்த பழக்கத்தை கடைபிடிக்கும் ஒருவர், இரு உணவுக்கு இடையே குறைந்த 10 மணி நேரம் இடைவெளிக் கொடுக்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் இண்டர்மிட்டண்ட் டயட் முறையை பின்பற்றி வருகிறார்கள் என மருத்துவர் ஒருவர் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
அவர் இது போன்று டயட்டில் இருப்பவர்கள் பழைய சாதத்தை தெரிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். பழைய சாதம் சாப்பிட முடியாதவர்கள் ஒரு மீன் குழம்பை சேர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், பழைய சாதத்துடன் மீன் குழம்பு சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

பழைய சாதத்துடன் மீன் குழம்பு
1. இரவு சாதம் மிஞ்சி விட்டது என கவலைப்படுபவர்கள் பழைய சாதத்தை காலையில் மீன் குழம்பு உடன் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.
2. பழைய சாதம் என்றால் நம்மிள் பலரும் அதனை வறுமையில் உள்ளவர்கள் சாப்பிடும் சாப்பாடு என நினைக்கிறார்கள். ஆனால் அது வைட்டமின்கள் (B காம்ப்ளக்ஸ், K) மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம்) எளிதில் உறிஞ்சப்படும் உணவாகும். மீன் குழம்பில் உள்ள மீனில் ஒமேகா-3 உள்ளது. இது சத்துக்களை சீக்கிரம் உறிஞ்ச உதவியாக இருக்கிறது.

3. பழைய சோற்று காலையில் எடுக்கும் பொழுது சற்று புளிப்பு தன்மையுடன் இருக்கும் இது உடலுடன் இலகுவாக கலந்து விடுகிறது. நீண்ட நேர ஆற்றலையும் வழங்கும்.
4. செரிமான பிரச்சினைகள், வயிற்றுவலி போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய சாதம் சாப்பிடலாம். இது வயிற்றின் உள்ளே சென்று அமிலத்தன்மையை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

5. மீனில் உள்ள ஜிங்க், செலினியம் போன்ற சத்துக்களும், பழைய சோற்றில் உள்ள சத்துக்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இன்னும் வலுப்படுத்தும். எனவே நீங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் பீட்சா, பர்கர்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இது போன்று ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் உடல் மேலும் ஆரோக்கியமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |