சிறகடிக்க ஆசை சீரியலில் பாட்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் இவரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் பாட்டியாக நடிக்கும் ரேவதியை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிறகடிக்க சீரியல்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த சீரியலுக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே இது தன் வசப்படுத்தி வைத்துள்ளது.
மேலும் இந்த சீரியலில் ரசிகர்களை கவர்வதற்காக சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு நகர்ந்து செல்கின்றது.
எஸ்.குமரன் இந்த சீரியலை மிகவும் சிறப்பாக இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து இந்த சிரியலில் முத்துவின் பாட்டியாக நடிக்கும் ரேவதியை இதுவரையிலும் தெரியாத ஒரு விஷயம் தெரியவந்துள்ளது.
ரேவதி
இவர் தற்போது பாட்டியாக நடித்து இருந்தாலும் இவர் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகுமார் அறிமுகமான காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார்.
இது தவிர தனிப்பிறவி என்னும் படத்தில் எம் ஜி ஆருக்கு தங்கையாக நடித்திருக்கிறார். நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவரின் பாட்டியாக நடித்திருப்பார்.
இப்படி இளம் வயதில் இருந்தே நடித்து வரும் ரேவதி தன்னுடைய முதிர் வயதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |