ராஜநாகம் பற்றி உங்களுக்கு தெரியுமா? நம்பமுடியாத சுவாரசிய தகவல்கள்
ராஜநாகம், உலகிலேயே மிக நீண்ட விஷப்பாம்பு என்று அறியப்படுகிறது. ஆசியாவின் காடுகளில் வாழும் இந்த கம்பீரமான பாம்பு, அதன் கொடிய விஷத்தன்மை மற்றும் வியக்க வைக்கும் குணாதிசயங்களால் புகழ்பெற்றது.
சுவாரசிய தகவல்
ராஜநாகம் சுமார் 5.5 மீட்டர் (18 அடி) நீளம் வரை வளரக்கூடியது. இது உலகிலேயே மிக நீளமான விஷப்பாம்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ராஜநாகம் பெரும்பாலும் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்கிறது. எலிகள், பல்லிகள் போன்ற சிறிய விலங்குகளையும் உண்ணும். ஆனால் இதன் முக்கிய உணவு மற்றவர் பாம்புகள் தானாம்.
ராஜநாகம் முட்டையிடுவதற்கு முன்பு, சருகுகள் மற்றும் கிளைகளைப் பயன்படுத்தி ஒரு கூட்டைக் கட்டும். முடடையிடும் மற்ற பாம்புகள் கூட்டைக்கட்டாத நிலையில், இது ஒரு தனித்துவமான பண்பாகும்.
ராஜநாகத்தின் விஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. இது ஒரு மனிதனையோ அல்லது ஒரு ஆசிய யானையையோ ஒரே கடியில் கொல்லக்கூடிய அளவுக்கு விஷம் கொண்டது. இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்குமாம்.
ராஜநாகம் பிறரை அச்சுறுத்தப்படும்போது, தனது உடலின் முன்பகுதியை உயர்த்தி, கழுத்துப்பகுதியை விரித்து, சீறிக்கொண்டு எச்சரிக்கை செய்யும். இது சுமார் 1.2 மீற்றர்(4 அடி) உயரம் வரை எழும்பக்கூடியது.
இப்பாம்புகள் முக்கியமாக இந்தியா, தென்கிழங்கு ஆசியா மற்றும் சீனாவில் உள்ள அடர்ந்த காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் காணப்படுகின்றன.
ராஜநாகம் பொதுவாக 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. வனவிலங்குகளில் இதன் ஆயுள் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
முட்டையிட்ட பின்பு பெண் ராஜநாகம் தனது கூட்டின் அருகில் இருந்து முட்டைகளை பாதுகாக்கின்றன. முட்டைகள் பொரிக்கும் வரை அது உண்ணாமல் கூட்டைக் காக்கும்.
ராஜநாகத்தின் நிறம் அது வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இது பழுப்பு, மஞ்சள், கருப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கலாம். இதன் உடலில் பொதுவாக கோடுகள் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |