நயன்தாரா என்னை அழைத்து கேவலப்படுத்தி விட்டார்: வேதனையுடன் பேசிய ஜி.பி.முத்து!
நயன்தாராவின் புதிய திரைப்பட்டத்திற்கு அழைக்கப்பட்ட ஜி.பி.முத்து பவுன்சர்கள் மரியாதை குறைவாக நடத்தி அவமானப்படுத்தியதாக ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.
ஜி.பி.முத்து
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் டிக்டொக் மூலம் பிரபலமான ஜி.பி. முத்துவும் ஒருவராக கலந்துக் கொண்டார்.
இந்நிலையில், அவர் இரண்டே வாரத்தில் தனது குடும்பத்தினரின் நியாபகமாக இருப்பதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
ஆனால் வெளியே வந்தததும் அவருக்கு அடீமாக வரவேற்பு கிடைத்தது. பின்னர் பல படங்களின் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. மேலும், பல திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு வருகிறார்.
அவமானப்படுத்தப்பட்ட ஜி.பி.முத்து
'கனெக்ட்' படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,
நிகழ்ச்சி நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடம் படம் பார்க்க விரும்புவதாக கூறி அழைத்தனர். ஆனால் என்னை எங்கோ ஒரு ஓரத்தில் அமரவைத்துவிட்டனர்.
அதோடு அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தரக்குறைவாக நடத்தினர். தூரப்போ என்று விரட்டினர். அது எனக்கு சங்கடமாக இருந்தது எனவே தான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
நயன்தாராவிற்கு சம்பந்தம் இல்லை
நயன்தாரவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பவுன்சர்கள் என்னை கேவலமாக நடத்திவிட்டார்கள்.
நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன் அதன் பிறகு விக்னேஷ் சிவன் என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.
நான் அங்கிருந்து கிளம்பி வெகுதூரம் வந்துவிட்டதால் அடுத்த முறை சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டேன் இவ்வாறு அவர் கூறினார்.