2 தக்காளி, 1 வெங்காயம் வீட்டுல இருக்குதா? இந்த திடீர் சட்னியை செய்து பாருங்க
வெறும் 5 நிமிடத்தில் திடீர் தக்காளி சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் இட்லி, தோசை சாப்பிடுபவர்களுக்கு சட்னி என்பது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் பல சட்னிகளை நாம் ருசித்து பார்த்திருப்போம்.
ஆனால் நேரம் குறைவாக செலவழித்து சட்னி செய்வதை தான் பலரும் விரும்புகின்றனர். இட்லி மட்டுமின்றி சப்பாத்துக்கும் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும் இந்த திடீர் தக்காளி சட்னி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கு பிடித்த வகையில் வெறும் 5 நிமிடத்தில் இந்த தக்காளி சட்னி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
2 பழுத்த தக்காளி
5 சின்ன வெங்காயம் (அல்லது அரை பெரிய வெங்காயம்)
2 பூண்டு பற்கள்(பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேவையான அளவு உப்பு
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை
முதலில் கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் கரண்டி அல்லது கைகளால் நன்றாக மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பதற்கு கடுகு, உளுந்தம்பருப்பு சேர்க்கவும்.
பின்பு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக மணம் வரும்வரை வதக்கி இறக்கவும். இந்த தாளிப்பினை ஏற்கனவே மசித்து வைத்துள்ள தக்காளி கலவையுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அடுப்பில் வதக்காமலும், மிக்ஸியில் அரைக்காமலும் சுவையான திடீர் தக்காளி சட்னி தயார். இதனை தற்போது இட்லி, தோசைக்கு வைத்து பரிமாறலாம்

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |