மொறு மொறு ரவா தோசைக்கு இனி மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்...அரை நிமிடத்தில் சுடச் சுட சுவைக்கலாம்!
தோசையில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கின்றன.
ஆனால் தோசைகள் செய்யவது கடினமான வேலை.
இனி மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.
உங்களுக்காகவே நாங்கள் சில எளிய டிப்ஸ்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
ரவா தேசைக்கு தேவையான பொருட்கள்
- ரவை – 1 கப்
- அரிசி மாவு – 3/4 கப்
- மைதா மாவு – 1/4 கப்
- தேங்காய் (துருவியது) – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 3
- தனியா – 1/4 கப்
- வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1/2
- உப்பு ( சுவைக்கு ஏற்ப)
- தண்ணீர் – 2 3/4 கப்
- எண்ணெய் 1 டீஸ்பூன்
- நெய் – 1 டீஸ்பூன்
இன்ஸ்டன்ட் ரவா தோசை செய்வது எப்படி?
முதலில் வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர், ஒரு பெரிய கலவை கிண்ணத்தில் ரவா, அரிசி மாவு, மைதா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இவற்றை அப்படியே அரை மணி நேரம் ஒதுக்கி வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு பெரிய நான்-ஸ்டிக் பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய் தடவி, அதை சூடாக்கவும். தோசையை அடுத்த பக்கம் திருப்பி வேக வைக்கவும்.
அரை நிமிடம் வெந்த பிறகு தோசை கரண்டி கொண்டு எடுத்துக்கொள்ளவும்.
இந்த தோசையுடன் சிறிது தேங்காய் சட்னி, கார சட்னி சுவைத்து மகிழலாம்.
நான்கு முக்கிய குறிப்புகள்
நீங்கள் மாவுக்குத் தயாரிக்கத் தொடங்கும் போது, சீரான தன்மையை மெல்லியதாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரவா தோசைக்கு மாவு சேர்க்கும் போது ரவாவை நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். நீங்கள் தவாவில் மாவை ஊற்றுவதற்கு முன், அதை ஒரு முறை கிளறி, கலவை மெல்லியதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பாக நீங்கள் முதல் முறையாக ரவா தோசை செய்ய முயற்சிப்பவராக இருந்தால் சரியான முறையில் எண்ணெய் தடவப்படாவிட்டால், உங்கள் மாவு கீழே சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும்போது, அது நிகழும் வாய்ப்புகள் குறையும்.
மாவை ஊற்றுவதற்கு முன், தவாவை ஒரு முறை சூடாக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் தெளித்து, மாவை தவா முழுவதும் ஊற்றவும். இதனால் ரவா தோசைக்கு ஒரு அமைப்பு உருவாகிறது.
மிருதுவாக இருக்க, எப்போதும் மிதமான தீயில் சமைப்பது நல்லது!