Payasam Premix: தித்திக்கும் சுவையில் பாயசம்.., இனி 5 நிமிடத்தில் செய்யலாம்
பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
பாயசம் செய்ய சேமியாவை வறுத்து அதனை செய்வதற்குள் குறைந்தது அரை மணி நேரம் ஆகிவிடும்.
அந்தவகையில், பாயசம் Premix செய்து வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் 5 நிமிடத்தில் தித்திக்கும் பாயசம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- சேமியா- 2 கப்
- சர்க்கரை- 1 கப்
- பால் பவுடர்- ½ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- குங்குமப்பூ- 10 இதழ்
- நெய்- 1 ஸ்பூன்
- பால்- 2 கப்
- முந்திரி- 5
- பாதம்- 5
- பிஸ்தா- 5
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடானதும் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இது நன்கு ஆறியதும் இதில் சர்க்கரை, பால் பவுடர், ஏலக்காய் தூள், பொடித்த குங்குமப்பூ, நறுக்கிய முந்திரி, பாதம், பிஸ்தா சேர்த்து கலந்து ஒரு பாக்ஸில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
அடுத்து பாயசம் செய்ய ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்ததும் அதில் செய்துவைத்த பாயசம் Premix-ஐ சேர்த்து கொதித்து சேமியா வெந்து வந்து இறக்கினால் சுவையான பாயசம் தயார்.
இந்த Premix-ஐ 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம், இது ஒன்னு இருந்தால் போதும் 5 நிமிடத்தில் சுவையான பாயசம் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |