இட்லி மா அரைக்காமல் இட்லி செய்யலாம்... எப்படித் தெரியுமா? இத ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே பலரது வீட்டில் காலை உணவு இட்லி சாம்பாராகத் தான் இருக்கும். இட்லி காலை உணவு என்றாலும் ஒரு சிலர் மூன்று வேளையும் இதனை உணவாக கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.
அவ்வாறு வீட்டில் இட்லி செய்யும் போது மா அரைக்காமல், ஒரு பொடியை செய்து சுவையான இட்லி செய்து சுவைக்கலாம் எப்படித் தெரியுமா?
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 4 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
தயிர் - 50ml
இட்லி மா செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து நிறம் மாறாத அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் உளுந்தையும் தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு இந்த பொடியை இட்லி அல்லது தோசை செய்வதற்கு முன் பொடியில் தண்ணீர், உப்பு, மற்றும் சோடா சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
8 மணிநேரத்திற்குப் பிறகு தோசை அல்லது இட்லி செய்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |