இனிமேல் போட்டோ, வீடியோக்களை Crop செய்ய தேவையில்லை... இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!
பொதுவாகவே தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டனர். உண்மையில் ஒரு நாளை கூட சகூக வலைத்தளங்கள் இன்றி கடக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
அந்த வவையில் தற்போது உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இந்த செயலியில் இளம் தலைமுறையினர் தற்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு சிறந்த ஒரு களத்தை உருவாக்கிக்கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது.
இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்
இன்டாகிராம் மூலம் பல்வேறு திறமைகளுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கின்றது. அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 3:4 Ratio-விலும் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் இனிமேல் புகைப்படங்களை Crop செய்ய வேண்டிய தேவை இருக்காது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 வடிவங்கள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |