கணவருடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி கிகி! குவியும் லைக்குகள்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிகி அவரது கணவரும் நடிகருமான சாந்தனுவுடன் அசத்தல் குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி கிகி
பிரபல தொகுப்பாளினி கிகி விஜயின் முழுப்பெயர் கீர்த்தனா. இவரை ரசிகள்கள் செல்லமாக கிகி என்று அழைப்பது வழக்கம். இவர் மாடல், நடிகை என நிறைய விஷயங்களில் ஈடுபாடு காட்டி அசத்தி வருகிறார்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
அதனை தொடர்ந்து, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.
இவர் நடிகரும் பிரபல இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் “டான்ஸ் அகாடமி” ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சமூக வலையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிகி, தனது கணவருடன் இணைந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |