நீயோ மான்குட்டி.. நானோ யானைக்குட்டி! மகாலட்சுமிக்காக கவிதை சொல்லிய ரவீந்தர்
மகாலட்சுமியை ரைமிங்கில் கவிதை சொல்லி கலாய்த்த ரவீந்தரின் இன்ஸ்டா பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமாகியவர் நடிகை மகாலட்சுமி.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறியுற்ற நிலையில் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
பொண்டாட்டிக்காக கவிதை எழுதிய ரவீந்தர்
இதனை தொடர்ந்து இவர்களை விமர்சனம் செய்த அனைவருக்கும் ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரவீந்தர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விடயங்களையும் புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்.
இதன்படி, காரில் மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு, “நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்.” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இவரின் பதிவிற்கு மகாலட்சுமி, “நீ தான் ஏ செல்லகுட்டி” என பதிலளித்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “பொண்டாட்டிய தனியா கொஞ்சிங்க இப்படி பப்ளிக்கா கொஞ்சாதீங்க” மற்றும் “விமரச்கர்களுக்கு சூப்பரான கண்டன்ட்” என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.