மகாலட்சுமிக்கு 20 வயசு கம்மியா? ரவீந்தரின் உண்மையான வயதை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.
சர்ச்சைக்கு முற்று வைத்த காதல் ஜோடி
இவர்கள் இருவரையும் திடீரென திருமண கோலத்தில் பார்த்ததும், அதன்படி நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் 20 வயது வித்தியாசம், இது கட்டாய திருமணம் என்றெல்லாம் ட்ரோல் செய்து வந்தனர்.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் ஜோடியாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
அதில், அவர்கள் கூறுகையில், தங்களது திருமணம் காதல் திருமணம் தான் என்றும், இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் வயது குறித்து பரவிய சர்ச்சைக்கும் விளக்கம் அளித்துள்ளார் ரவீந்தர்.
ரவீந்தரின் உண்மை வயது
எனக்கு 52 வயது ஆகிவிட்டதாகவும், நான் ஏதோ மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.
உண்மையிலேயே எனக்கு 38 வயது தான் ஆகிறது.
எங்கள் இருவருக்கும் அவ்வளவு வயது வித்தியாசமெல்லாம் இல்லை எனக் கூறி சர்ச்சைகளுக்கு ரவீந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது ரவீந்தருக்கு 38 வயது தானா என ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.