“ஹாஸ்பிடல் சீன்ல கூட லிப்ஸ்டிகா!” நயனை விமர்சித்த மாளவிகாவை தரமாக வைத்து செய்த லேடி சூப்பர் ஸ்டார்!
திரைப்படத்தில் நயன்தாராவை விமர்ச்சித்த மாளவிகாவிற்கு, கனெக்ட் திரைப்பட பேட்டியில் நயன்தாரா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
காதல் திருமணம் மற்றும் குழந்தைகள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு திகழ்ந்து வருபவர் தான் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய விடயங்கள் எழுந்தது. இதற்கு எல்லாம் நயன் சரியான பதிலடிக் கொடுத்துள்ளார்.
புதிய திரைப்படம்
இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் சினிமாவிலிருந்து விலகவில்லை. தற்போது கனெக்ட் என்ற பேய் படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார் இதில் நயனுடன் பாலிவுட் நடிகர் அனுபம் கேர், சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்துக் கொண்டுள்ளார்.
அதில் பிரபல தொகுப்பாளினி மற்றும் நயனின் நண்பரான டிடியும் கலந்துக் கொண்ட நயனின் சினிமா பயணத்தை பற்றி இன்டர்விவ் ஒன்றையும் எடுத்திருந்தார்.
பிரபல நடிகை தரமாக வைத்து செய்த நயன்
இந்த இன்டர்விவ்ல் தன்னுடைய சினிமா பயணம் தொடர்பிலும் தனக்கு வந்த கசப்பான அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்திருந்தார்.
அதில் மாளவிகா மோகனன் குறித்து மறைமுகமாக நயன்தாரா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த விடியோவில், ஒரு படத்தில் வைத்திய சாலையில் இருக்கும் காட்சியில் நான் அதிக மேக்கப்புடன் இருந்தாக ஒரு நடிகை பேட்டியில் கூறியிருந்தார்.
எனக்கு எந்த படத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியும் என அதிரடியாக கூறியிருந்தார்.
இதனை நெட்டிசன்கள் எடுத்து இது குறித்து யார் கூறிக்கிறார் என தேடி பார்த்த போது மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில்“ லேடி சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில் வைத்தியசாலையில் இருக்கும் காட்சியில் அதிக மேக்கப்புடன் இருந்தார்.
அப்படி யாராவது சீறியஸான நிலைமையில் இருப்பாங்களா" என நயனை கலாய்த்தது சிக்கியுள்ளது.
வைரலாகும் காட்சி
Slippershot To Malavika?#Nayanthara ?
— ????? ????? (@AjithBruceOffl) December 21, 2022
pic.twitter.com/IHA2WkEEJC
இதனை தற்போது சமூக வலைத்தளங்களில் ரோல் செய்து பதிவிட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த நயன் ரசிகர்கள் சரியான பதிலடி என்றும், மாளவிகா மோகனன் மூக்கை உடைத்த நயன் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.