அந்தரத்தில் பறக்கும் கனவு வீடு! கட்டிட தொழிலாளி கொடுக்கும் பரபரப்பான விளக்கம்
விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையில், தன்னுடைய வீடை விமானம் போல் வடிவமைத்த கட்டிட தொழிலாளி தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மனிதர்களுக்கு வரும் ஆசைகள்
பொதுவாக ஆளுக்கு ஆள் அவர்களின் ஆசைகள் வேறுப்பட்டவையாக காணப்படும். இதனால் பலர் தன்னுடைய வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள துணிவார்கள். ஆனால் சிலருக்கு மட்டும் தான் இந்த ஆசைகள் நிறைவேறும், சிலர் அதனை நிறைவேற்றும் முயற்சித்து இறந்து விடுவார்கள்.
இதன்படி, கம்போடியாவிலுள்ள க்ராச் போவ் எனும் கட்டிட தொழிலாளியொருவர் விமானத்தில் செல்ல வேண்டும் நீண்ட ஆசையாகக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது ஆசை வீட்டை தரை மட்டத்திலிருந்து சுமார் 6 அடி உயர்த்தில் தரையில் அவரது இரண்டு படுக்கையறைகள் மற்றும் குளியலறைகளையும் கொண்டு அந்த வீடு காணப்படுகிறது. இந்த வீட்டை கட்டுவதற்காக சுமார் 30 வருடங்கள் உழைத்து சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது.
விமானப் போல் அழகிய வீடு
இவர்களின் வீட்டை கட்டிய க்ராச் போவ் அதற்கு சுமார் $20,000 செலவழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை வெளியிலிருந்து பார்ப்பதற்கு போலி என்ஜின்கள், இறக்கைகள் மற்றும் டெயில்பிளேன் போன்றவைகள் அசல் விமானம் போல் அமைய காட்டுகிறது.
இந்த நிலையில் இந்த வீட்டில் இருக்கும் போது விமானத்தில் பறப்பது போன்று அவர் உணருவதாகவும் கூறியிருக்கிறார். இவரின் வீட்டில் பக்கத்தில் ஒரு இடம் இருப்பதாகவும் இங்கு ஒரு காபி ஷாப் கட்டப்போவதாகவும் அவர் தொடர்ந்து கூறியிருக்கிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த நபருக்கு வாழ்த்து தெரிவித்துடன், அந்தரத்திலிருக்கும் வீட்டிற்கு கடவுளிடம் வேண்டிக் கொள்வதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.