விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் சேமிக்கப்படுவது ஏன்?
விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் சேமித்து வைக்கப்படுவதன் பின்னணியில் பல சுவாரஸ்மான தகவல்கள் காணப்படுகின்றன.
இறக்கைகளில் எரிபொருள் சேமிக்கப்படுவது ஏன்?
சில முக்கியமான காரணிகளின் அடிப்படையில் நவீன விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் தாங்கிகள் காணப்படுகின்றன.
விமானத்தின் இறக்கைகளில் குறிப்பிடத்தக்களவு இடவசதி காணப்படுகின்றது.
இறக்கைகளில் எரிபொருளை சேமித்து வைப்பதனால் விமானம் பறக்கும் போது அதன் சமனிலையை பேணுவதற்கு ஏதுவாகின்றது என்பதுடன், விமானத்தில் கூடுதல் அளவில் பொருட்களை காவிச் செல்ல சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
விமானம் பறப்பதுடன் இறக்கைகள் நேரடியாகவே தொடர்புடைவை.
விமானம் வானில் Takeoff செய்யும் போது விமானத்தின் மொத்த எடையில் மூன்றில் ஒரு பகுதி எரிபொருளாக காணப்படுகின்றது.
Photo: Getty Images
போயிங் 747 ரக விமானம்
போயிங் 747 ரக விமானம் ஒரு செக்கனுக்கு ஒரு கேலன் எரிபொருளை செலவிடுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எரிபொருள் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது.
அடுத்த தலைமுறை விமானங்களிலும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
விமானத்தை தரையிறக்குவது, திசை திருப்புதல் மற்றும் ஏனைய அவசரங்களின் போது பயன்படுத்த இவ்வாறு எரிபொருள் தேவைப்படுகின்றது.
Photo: Tosaka via Wikimedia Commons
எயார்பஸ் A350 ரக விமானங்கள்
தற்காலத்தில் காணப்படும் இரட்டை என்ஜின்களை உடைய எயார்பஸ் A350 ரக விமானங்கள் சுமார் 37000 கேலன் எரிபொருளை காவிச் செல்லக்கூடியவை.
இந்த எரிபொருட்களை எரிபொருள் தாங்கிகளில் மட்டும் சேமித்தால், மேலதிகமாக சரக்குகளை எடுத்துச்செல்ல முடியாது என்பது விமானத்தின் கட்டமைப்பிற்கு இது அழுத்தமாக அமையும்.
இறக்கைகளில் எரிபொருளை நிரப்புவதன் மூலம் இந்த அழுத்தங்களை குறைக்க முடிகின்றது.
மேலும், விமானத்தின் சுமை அனைத்து பகுதிகளுக்கும் வியாபிக்க வழியமைக்கின்றது. சில வகை விமானங்களில் கழற்றி அகற்றக்கூடிய விமான எரிபொருள் தாங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo: Getty Images
ஏன் விமானங்கள் நேர்வழிப் பாதையில் பயணிப்பதில்லை? உங்களுக்கு தெரியுமா?