செல்போன் கவரில் பணம் வைப்பவரா நீங்கள்? ஜாக்கிரதை ஆபத்து இருக்கு
மொபைல் போனில் பணம் வைக்கும் பழக்கம் தற்போது பெரும்பாலான நபர்களிடம் காணப்படும் நிலையில், இது எப்படியொரு ஆபத்து என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மொபைல் போன்
இன்றைய காலத்தில் மொபைல் என்பது நமது வாழ்க்கையில் ஒன்றாக ஆகிவிட்டது. மொபைல் இல்லாத ஒருவரின் வாழ்க்கையை நாம் கற்பனை கூட செய்ய முடியாததாகியுள்ளது.
கல்வி சம்பந்தமாக மட்டுமின்றி வங்கிகளின் சேவைகள், பொழுது போக்கு என அனைத்திற்கும் மொபைல் போன் அத்தியாவசியமாகியுள்ளது.

ஆனால் இதனை பாதுகாப்பாக பயன்படுத்தினால் நமக்கு எந்தவொரு ஆபத்தும் கிடையாது. ஆனால் நாம் சில தருணங்களில் செய்யும் தவறுகள் மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்துகின்றது.
பணம், அடையாள அட்டையை வைக்கலாமா?
இன்று பெரும்பாலான நபர்கள் பணம், அடையாள அட்டை, வங்கி அட்டை இவற்றினை மொபைல் கவரில் வைக்கும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர்.
இவை மொபைல் போன் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் சார்ஜ் செய்யும் போதோ, விளையாடும் போதோ, வீடியோ பார்க்கும் போதோ, மற்றவர்களிடம் பேசும் போதோ அதிகமாக சூடாகிவிடுகின்றது.
இவ்வாறு சூடாகும் போதும் ரூபாய் நோட்டில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற வேதிப்பொருள் மொபைல் வெப்பத்துடன் வினைபுரிந்து வெடிக்கும் நிலை ஏற்படுகின்றது.

மொபைல் போனிலிருந்து வெளிவரும் காந்தபுலத்தினை நீங்கள் வைத்திருக்கும் பணம், கார்டு போன்றவை தடுப்பதால் வெப்பம் வெளியே செல்ல முடியாமல் வெடிக்கும் நிலைக்கு செல்கின்றது.
செல்போன் என்பது நமது வாழ்வில் முக்கிய கருவியாக இருப்பதால், இதனை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆதலால் ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை, பணம் இவற்றினை பர்ஸிலோ, அல்லது பாக்கெட்டிலோ வைப்பது தான் சிறந்த தீர்வாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |