காதுக்குள் எறும்பு, பூச்சி புகுந்து விட்டதா? உடனே இதை செய்திடுங்க
நமது காதுக்குள் இரவு நேரத்தில் பூச்சி, எறும்பு சென்றுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காதுக்குள் எறும்பு நுழைந்தால்
காதுக்குள் பூச்சி, எறும்பு சென்றுவிட்டால் உடனடியாக இருட்டு அறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் லைட் பயன்படுத்தி வெளிச்சம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வெளிச்சத்தைக் கண்டதும் பூச்சி தானாக வெளிவந்துவிடும்.
ஆலிவ் ஆயில் அல்லது குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஆயில் இவற்றினை எடுத்துக் கொண்டு இரண்டு, மூன்று துளிகள் காதுக்குள் விடவும். இதனால் பூச்சிகள் நீண்ட நேரம் காதுக்குள் இருக்கமுடியாமல் வெளியே வந்துவிடும்.
மிதமான சுடுதண்ணீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் இரண்டு, மூன்று சொட்டு விட்டால் பூச்சி உடனே வெளியேறிவிடும்.
தவிர்க்க வேண்டிய செயல்கள்
பாதுக்குள் பூச்சி சென்றததும், கூர்மையான பொருட்கள், இயர் பட்ஸ் இவற்றினை பயன்படுத்தி எடுக்க முயற்சிக்க கூடாது. இதனால் பூச்சிகள் மேலும் உள்ளே செல்வதுடன், காது ஜவ்வும் சேதமடையும்.
விரலால் அகற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். இது மேலும் வலியை ஏற்படுத்துவதுடன், காது பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.
தண்ணீர் அல்லது எண்ணெய் ஊற்றியும், பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |