INDvsWI; டி20 அணியில் இடம் பிடித்த இரண்டு தமிழக வீரர்கள்; தேர்வு செய்ய இதுதான் காரணமாம்;
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.
இதனையடுத்து, இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கான், ஆர். சாய் கிஷோர் ஆகியோர் இருப்பு (reserves) வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை காரணமாகவே தமிழக வீரர்களை இருவரையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சாய் கிஷோர் இடம் பிடித்திருந்தார். அதற்பின் தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார்.
மேலும், ஷாருக்கான் இந்தியாவின் முதன்மை அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் பட்டியலில் உள்ளார். டி20-யில் அதிரடி காட்டி வரும் அவர், சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் விளாசி, கர்நாடகா அணிக்கு எதிராக தமிழக அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய டி20 அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.